மேலும் செய்திகள்
மருந்துகளை பாதுகாப்பாக அகற்ற மத்திய அரசு உத்தரவு
30-May-2025
பெங்களூரு : 'பாராசிட்டமால் 650' மாத்திரை மற்றும் 14 மருந்துகள் பயன்படுத்த, கர்நாடக அரசின் சுகாதார துறை தடை விதித்துள்ளது.கர்நாடக அரசின் சுகாதார துறை கடந்த மே மாதம், உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை, மருந்துகளின் மாதிரியை பெற்று ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. தற்போது வெளியாகி உள்ள ஆய்வு முடிவின்படி ஆபத்தான 15 வகையான மாத்திரை, மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அதன் விபரம்:1. கூட்டு சோடியம் லாக்டெட் ஊசி ஐ.பி.,2. கூட்டு சோடியம் லாக்கெட் ஊசி ஐ.பி., - ஆர்.எல்.,3. பாராசிட்டமால் 650 மாத்திரை.4. மிட்கியூ 7 சிரப்.5. கோழிகளுக்கு போட பயன்படுத்தப்படும் என்.டி., - ஐ.பி., - ஐ.பி.டி., கூட்டு தடுப்பூசி.6. ஸ்பான்பிளாக்ஸ் ஓ.டி.மாத்திரைகள்.7. பான்டோகாட் - டி.எஸ்.ஆர்.,8. சோடியம் குளோரைடு ஊசி ஐ.பி., 0.99. ஆல்பா லிபோயிக் அமிலம்.10. ஓம் சாந்தி கோல்டு கிளாஸ் குங்குமம்.11. பைராசிட் ஓரல் சஸ்பென்ஷன்.12. கிளிமிஸ்- 2.13. அயர்ன் சுக்ரோஸ் ஊசி யு.எஸ்.பி.,14. சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.,மேற்கண்ட மாத்திரை, மருந்துகளை மொத்த விற்பனையாளர்கள், மருத்துவமனைகள், கிளினிக்கில் சேமித்து வைத்து விற்பனை செய்யவோ, அதை பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.“ஏதேனும் இருப்பு இருந்தால் உள்ளூர் மருத்துவ கண்காணிப்பாளர், உதவி மருத்துவ கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறி உள்ளார்.
30-May-2025