| ADDED : டிச 29, 2025 06:34 AM
பெங்களூரு: கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் 41 வது ஆண்டு விழா, பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள பார்வதி கன்வென்ஷன் ஹாலில் நேற்று நடந்தது. கர்நாடக மாநில நெசவாளர் சமூக கூட்டமைப்பு நிறுவன தலைவரான, முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணா, மாநில தலைவர் சோமசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களை, கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் கவுரவித்தனர். சங்க துணை தலைவர் பிச்சாண்டி, செயலர் வடிவேலு, இணை செயலர் வெங்கடேசன், பொருளாளர் சந்திரசேகர் கலந்து கொண்டனர். மாலுார், மைசூரு, குடகு, தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை செங்குந்தர் சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். சங்க காலண்டர் வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. கல்யாண மாலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.