மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்: அக். 26
26-Oct-2026
வாலிபர் மர்மச்சாவு போலீஸ் விசாரணை
10-Oct-2026
கெங்கேரி: பணம் மற்றும் தங்க மோதிரத்துக்காக, மூதாட்டியை கொலை செய்தவர், போலீசாரிடம் சிக்கினார். ராம்நகர், பிடதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் நாராயணம்மா, 65. குடும்பத்தை விட்டு பிரிந்த இவர், பெங்களூரின், கெங்கேரியின், கோனசந்திராவில் தனியாக சாலையில் நடமாடியபடி, வாழ்க்கை நடத்தினார். அங்குள்ள கோவில் அருகில் அமர்ந்திருப்பார். கடந்த நான்கு நாட்களுக்கு முன், இவர் கோவில் அருகில் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டனர். முதலில் இயல்பான இறப்பு என, கருதப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில், அவர் கொலையானது தெரிந்தது. அதன்பின் விசாரணை நடத்தி ஒரு நபரை கைது செய்தனர். மூதாட்டி கோவில் அருகில் அமர்ந்திருந்த போது, அவரது கையில் தங்க மோதிரம், பணம் இருப்பதை பார்த்த அந்நபர், மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மோதிரம், பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். கொலையாளி பற்றிய விபரங்களை, போலீசார் பகிரங்கப்படுத்தவில்லை.
26-Oct-2026
10-Oct-2026