உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 100க்கும் மேற்பட்ட பி.ஜி.,க்கள் விதிமீறலால் சமையல் அறைக்கு பூட்டு

100க்கும் மேற்பட்ட பி.ஜி.,க்கள் விதிமீறலால் சமையல் அறைக்கு பூட்டு

பெங்களூரு: சுகாதார துறையின் விதிகளை மீறியதால், 100க்கும் மேற்பட்ட 'பேயிங் கெஸ்ட்' மையங்களின் சமையல் அறைகளுக்கு, பெங்களூரு மாநகராட்சி பூட்டுப் போட்டுள்ளது.இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி சுகாதார பிரிவு கமிஷனர் சுரல்கர் கிஷோர் கூறியதாவது:பெங்களூரில் இயங்கும் பி.ஜி.,க்கள் நடத்த உரிமம் அளிக்கும்போது, சில விதிகளை பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 40 அடிக்கும் குறைவான அகலம் உள்ள, குடியிருப்பு பகுதிகளில் வர்த்தக செயல்பாடுகள் நடத்த தடை அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலான பி.ஜி.,க்கள், குடியிருப்புப் பகுதிகளில் செயல்படுகின்றன. சில பி.ஜி.,க்கள் முறைப்படி உரிமம் பெறாமல் இயங்குகின்றன.சில பி.ஜி., சங்கங்கள், தங்களின் கட்டடங்கள் குடியிருப்பு எல்லையில் வருகின்றன. இவற்றில் பி.ஜி.,க்கள் நடத்த அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளன. இது குறித்து ஆலோசிக்கப்படும். ஆய்வு செய்யும்போது, பி.ஜி.,க்கள் விதிமுறைகளை மீறியுள்ளன. 100க்கும் மேற்பட்ட பி.ஜி.,க்களின் சமையல் அறைகளுக்கு பூட்டுப் போட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூரின் பேயிங் கெஸ்ட் சங்கங்கள் செயலர் அர்ஜுன் பெல்லம் கூறியதாவது:விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தர்ம சத்திரங்கள் குடியிருப்பு எல்லைக்குள் வருகின்றன. மாணவ, மாணவியர், பணியாற்றும் பெண்கள், நர்சிங் ஊழியர்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்பாகவே கருத வேண்டும்.பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கையால், பி.ஜி.,க்களில் வசிப்போரின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைகிறது. இது குறித்து மாநகராட்சியிடம் விவரித்துள்ளோம். எங்கள் சூழ்நிலை, பி.ஜி.,க்களில் தங்கியிருப்போரின் நிலையை விவரிக்க, இம்மாதம் 21ம் தேதியன்று, மாநகராட்சி சுகாதார கமிஷனரை சந்திப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி