உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கூடலசங்கமா பஞ்சமசாலி மடம் புதிய மடாதிபதி நியமிக்க முடிவு

கூடலசங்கமா பஞ்சமசாலி மடம் புதிய மடாதிபதி நியமிக்க முடிவு

தார்வாட்: கூடலசங்கமா பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமிக்கு பதிலாக, புதிய மடாதிபதி நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் கூறி உள்ளார்.தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி:பஞ்சமசாலி சமூகத்தின் மேம்பாட்டுக்காக 2008ல் அறக்கட்டளை; கூடலசங்கமா பஞ்சமசாலி மடம் உருவாக்கப்பட்டது. அப்போது இருந்து மடத்தின் மடாதிபதியாக பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி உள்ளார். பசவ தத்துவத்தை ஊக்குவிக்கும் பணியை செய்ய வேண்டிய மடாதிபதி, தற்போது அரசியல் செய்கிறார்.பெலகாவி, தார்வாட், பெங்களூரில் அவருக்கு சொகுசு வீடு உள்ளது. மடாதிபதியை சந்திக்க வருவதாக கூறி, தேவை இல்லாதவர்கள் மடத்திற்கு வருகின்றனர். அவரது நடத்தை பஞ்சமசாலி மக்களுக்கு பிடிக்கவில்லை.மடாதிபதி பதவியில் இருந்து அவரை மாற்றிவிட்டு, புதிய மடாதிபதி நியமிக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. உடல்நலக்குறைவு என்று மடாதிபதி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது நாடகம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை