குமாரசாமியின் ஒத்துழைப்பு தேவை
குமாரசாமிக்கு மத்தியில் உயர்ந்த பதவி உள்ளது. முக்கியமான துறையை நிர்வகிக்கிறார். அவரது கருத்துகள், ஆலோசனைகளை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அவர் மாநில அரசுடன், நேரடி யுத்தம் செய்வதாக கூறுகிறார். அப்படி என்றால் அவர் துப்பாக்கி பிடித்து, அரசை எதிர்த்து போராடுவாரா.கர்நாடகா சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களில், மத்திய அமைச்சர் குமாரசாமியின் ஒத்துழைப்பு தேவை. அரசுக்கு உதவி செய்வதற்கு பதில், யுத்தம் செய்வதாக கூறுகிறார். பொறுப்பான பதவியில் இருக்கும் அவர், இப்படி பேசினால் நாங்கள் என்ன சொல்வது.பா.ஜ., தொண்டர் வினய் சோமய்யா தற்கொலை வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநில போலீசார் விசாரணையில் குறைகள் தென்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து, ஆய்வு செய்கிறோம்.- பரமேஸ்வர்,உள்துறை அமைச்சர்