உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லால்பாக் மலர் கண்காட்சி ஆக., 7ல் துவக்கம்

லால்பாக் மலர் கண்காட்சி ஆக., 7ல் துவக்கம்

பெங்களூரு: சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூரு லால்பாக் தாவரவியல் பூங்காவில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடக்கிறது.இந்த ஆண்டு சங்கொல்லி ராயண்ணா, ராணி கிட்டூர் சென்னம்மா ஆகியோரின் சாதனைகளை விளக்குவதை கருப்பொருளாக கொண்டு மலர்க் கண்காட்சி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 218வது மலர்க் கண்காட்சியில் 11 லட்சம் பார்வையாளர்கள் வருவர் என, லால்பாக் பூங்காவின் இணை இயக்குநர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரு தினங்களை முன்னிட்டு, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே நடக்கும் கண்காட்சியை குடும்பங்களுடன் சென்று பலரும் கண்டு களிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை