உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நிலகண்டி நீர்வீழ்ச்சிக்கு போலாமா!

 நிலகண்டி நீர்வீழ்ச்சிக்கு போலாமா!

- நமது நிருபர் -: மேற்கு தொடர்ச்சி மலையில், 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என அழைக்கப்படும் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. எப்போதும் குளிர்ச்சியான சூழ்நிலை, பசுமையான இயற்கையை காண எப்போதும் சுற்றுலா பயணியரின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இங்கு, பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், நிலகண்டி நீர்வீழ்ச்சியை, பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு செல்ல வேண்டும் என்றால், 138 ஏக்கர் 'ஹனி வேலி' என்ற காபி எஸ்டேட்டில் இருந்து. முதல் மூன்று கி.மீ., அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டும். வழியில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் ஓடைகளை ரசித்தபடி செல்லலாம். அப்படியே, மேலும் 4 கி.மீ., நடந்தால், நீர் வீழ்ச்சியை காணலாம். இங்கு செல்ல நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. காலை புறப்பட்டு இருட்டுவதற்குள் திரும்புவது நல்லது. நீர்வீழ்ச்சியை அடைந்ததும், ஒரு மணி நேரம் அப்பகுதியின் பசுமையை ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை