உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்த போது கூச்சலிட்ட இன்ஸ்பெக்டர்

 லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்த போது கூச்சலிட்ட இன்ஸ்பெக்டர்

பெங்களூரு: லஞ்சம் வாங்க முயன்ற போது, கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் மன நலம் பாதித்தது போல நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது. பெங்களூரு கே.பி., அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு. இவர், சீட்டு மோசடி வழக்கில் உங்களையும் சேர்த்து விடுவேன் என, ஒருவரை மிரட்டினார். அந்த நபரை வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக, நேற்று முன்தினம் நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்க முயன்ற போது, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், கோவிந்தராஜை, ஏழு லோக் ஆயுக்தா அதிகாரிகள் பிடித்திருப்பதும்; என்னை விடுங்கள், விடுங்கள் என மனநலம் பாதித்தவர் போல அவர் கத்துவதும் பதிவாகி உள்ளது. இதைப்பார்த்த பலரும், 'இன்ஸ்பெக்டர் நடித்து தப்பிக்க முயன்றார்' என, பலரும் கிண்டல் அடித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ