லாரி டிரைவர் அலட்சியம் 20 மாத ஆண் குழந்தை பலி
ஹெச்.ஏ.எல்.: பெங்களூரில் லாரி டிரைவர் அலட்சியத்தால், 20 மாத ஆண் குழந்தை பலியானது. பெங்களூரு, ஹெச். ஏ.எல்., குண்டலஹள்ளியில் வசிப்பவர் சித்தப்பா. இவரது மனைவி லாவண்ணா. தம்பதியின் 20 மாத ஆண் குழந்தை பிரணவ். நேற்று காலை வீட்டின் முன் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கான்கீரிட் லாரியில், உயர் மின் அழுத்த வயர்கள் சிக்கிக் கொண்டன. இதை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் அலட்சியமாக லாரியை ஓட்டினார். இதனால் மின்கம்பம் சாய்ந்து, சித்தப்பா வீட்டின் சுவர் மீது விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் பிரணவ் படுகாயமடைந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீஸ் தேடுகிறது.