உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகேஷ் திம்மரோடிக்கு ஜாமின் வழங்கல்

மகேஷ் திம்மரோடிக்கு ஜாமின் வழங்கல்

உடுப்பி: ஹிந்து அமைப்பின் மகேஷ் திம்மரோடியை கடுமையாக எச்சரித்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தட்சிண கன்னடாவின் உஜ்ரேயை சேர்ந்தவர் மகேஷ் திம்மரோடி, ராஷ்ட்ரிய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பின் தலைவராக உள்ளார். மருத்துவ மாணவி சவுஜன்யா கொலையில் பா.ஜ., தேசிய செயலர் சந்தோஷ் மீது அவதுாறு கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரை, பிரம்மாவர் போலீசார் கைது செய்து, 21ம் தேதி உடுப்பி ஹிரியடுக்கா சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜாமின் கேட்டு உடுப்பி முதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மகேஷ் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று நீதிபதி நாகேஷ் விசாரித்தார். 'சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது' என கூறிய நீதிபதி, அவருக்கு ஜாமின் வழங்கினார். இதுகுறித்து, மகேஷ் கூறுகையில், ''நீதி கேட்டு நடத்தும் என் போராட்டம் தொடரும். சுஜாதா பட் குறித்து பேச விரும்பவில்லை. மஞ்சுநாதரின் வழியில் நடப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ