உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

 ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

ஆனேக்கல்: 'ஸ்கேன்' செய்ய வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 'ரேடியாலஜிஸ்ட்' கைது செய்யப்பட்டார். பெங்களூரு ரூரல் ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேனிங் சென்டர் உள்ளது. இங்கு 34 வயது பெண், வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் செய்வதற்காக கடந்த 10ம் தேதி வந்திருந்தார். ஸ்கேன் சென்டரில் ரேடியாலஜிஸ்ட் ஆக வேலை செய்யும் ஜெயகுமார், பெண்ணின் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் செய்தபோது, அப்பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து ஆனேக்கல் போலீஸ் நிலையத்தில் சம்பவம் நடந்த அன்றே புகார் கொடுத்தார். இதை அறிந்த ஜெயகுமார் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், நேற்று ஜெயகுமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்