உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காதலிக்க மறுத்த ஆசிரியையை குத்தி கொலை செய்தவர் கைது

காதலிக்க மறுத்த ஆசிரியையை குத்தி கொலை செய்தவர் கைது

மைசூரு: காதலிக்க மறுத்த பள்ளி ஆசிரியையை, கத்தியால் குத்திக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.மாண்டியா மாவட்டம், பாண்டவபுராவின் எலிகெரேயை சேர்ந்தவர் பூர்ணிமா, 36. திருமணமான இவர், கணவரை பிரிந்து, மைசூரில் கிருஷ்ணமூர்த்திபுரத்தில் தங்கி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக, பணியாற்றி வந்தார். இவருக்கும், கியாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக், 26, என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் மாலையில், இருவரும் அப்பகுதியில் அம்பேத்கர் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பூர்ணிமாவிடம், தன் காதலை அபிஷேக் வெளிப்படுத்தினார். இதற்கு பூர்ணிமா, வயது வித்தியாசத்தை காரணம் காட்டி மறுத்துவிட்டார். மீண்டும் அபிஷேக் வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை.கோபமடைந்த அபிஷேக், தான் வைத்திருந்த கத்தியால், பூர்ணிமாவின் தலை, வயிற்றில் குத்தினார். பின், அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி, யாரோ தாக்கிவிட்டதாக கூறி, பூர்ணிமாவை ஏற்றி, தனியார் மருத்துவமனை முன் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.தகவல் அறிந்த லட்சுமிபுரம் போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று கத்தியை கைப்பற்றினர்.இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.தலைமறைவாக இருந்த அபிஷேக்கை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை