உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  97வது முறை திருடி போலீசில் சிக்கியவர்

 97வது முறை திருடி போலீசில் சிக்கியவர்

சிக்கபல்லாபூர்: 97வது முறையாக, திருட வந்த நபர் போலீசாரிடம் சிக்கினார். இவர் ஆந்திரா, தெலுங்கானா போலீசாராலும் தேடப்பட்டவர். தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராகுல் குமார் சர்மா என்ற பரத் குமார், 38. இவர் 14 வயது சிறுவனாக இருந்த போதே, வீடு புகுந்து திருடினார். சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின்னும் திருந்தாமல், திருட்டையே வழக்கமாக்கினார். சொகுசான வாழ்க்கைக்காக, வீடுகளில் திருடி வந்தார். ஆந்திரா, தெலுங்கானாவில் 96 வீடுகளில் திருடினார். சில வழக்குகளில் கைதான இவர், ஜாமினில் வெளியே வந்தார். தன் நண்பர் அல்லா பகாஷ் என்பவரை பார்ப்பதற்காக, சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவின் சந்தோஷ் நகருக்கு கடந்த மாதம் வந்தார். நண்பரை சந்தித்து பேசிவிட்டு, தெலுங்கானாவுக்கு திரும்பும் போது, நவம்பர் 27ல் சிக்கபல்லாபூர் அருகில் உள்ள, அனகநுார் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் வீட்டில் 20 கிராம் தங்க நெக்லஸ், 2.50 லட்சம் ரூபாயை திருடினார். இது ராகுல்குமாரின் 97வது திருட்டாகும். அவருக்கு நண்பர்கள் அல்லா பகாஷ், சையத் தாவூத் உதவினர். நாகராஜ் கொடுத்த புகாரின்படி, விசாரணை நடத்திய சிக்கபல்லாபூர் போலீசார், திருட்டில் ஹைதராபாத்தின் ராகுல்குமாருக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் அங்கு சென்ற சிக்கபல்லாபூர் போலீசார், நேற்று முன் தினம் அவரையும், கூட்டாளிகள் இருவரையும் கைது செய்தனர். 20 கிராம் நெக்லஸ், 25,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ