உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.500 கொள்ளை அடித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

 ரூ.500 கொள்ளை அடித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

ஷிவமொக்கா: கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாய் பறித்து சென்றவருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஷிவமொக்கா நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்துள்ளது. ஷிவமொக்கா நகரின், ராகிகுட்டாவில், 2021ல் சுனில் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழி மறித்த முகமது நுாருல்லா, 35, என்பவர், சுனிலை கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாய், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டை பறித்து தப்பினார். இது குறித்து, ஷிவமொக்கா ஊரக போலீஸ் நிலையத்தில், சுனில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், முகமது நுாருல்லாவை கைது செய்தனர். முகமது நுாருல்லாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி அபய் தனபால் சவுகலா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை