உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கி தவித்த நபர்

 சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கி தவித்த நபர்

சாம்ராஜ் நகர்: சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டு எப்படி உள்ளது என பார்க்க ஆசைப்பட்டு கூண்டிற்குள் சென்ற நபர், அதில், சிக்கிக் கொண்டார். மூன்று மணி நேரத்துக்கு பின் வெளியே வந்தார். சாம்ராஜ் நகர் மாவட்டம் கங்கவாடி கிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு, கிராமத்தினர் தகவல் அளித்தனர். அவர்களும் அப்பகுதிகளை ஆய்வு செய்து, கங்கவாடி கிராமத்தில், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். இந்த கூண்டை பார்த்த, அதே கிராமத்தை சேர்ந்த கிட்டி என்பவர், உள்ளே எப்படி உள்ளது என, பார்க்க விரும்பினார். அதனால், நேற்று யாரும் இல்லாத நேரத்தில் கூண்டுக்குள் சென்றார். சென்ற சில விநாடியில், கூண்டு தானாக மூடிக் கொண்டது. பதற்றமடைந்த கிட்டி, கூண்டை திறக்க முயற்சித்தார்; பலனளிக்கவில்லை. இதனால், உதவிக்காக கூக்குரலிட்டார். அந்த நேரத்தில் உடனடியாக யாரும் அங்கு வரவில்லை. பின், அவ்வழியாக சென்ற விவசாயிகளை பார்த்த கிட்டி, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டார். இதை பார்த்த விவசாயிகள் கூண்டை திறந்தனர். மூன்று மணி நேரம் கூண்டில் சிக்கிய அவர் வெளியே வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை