உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு பப்பில் கொள்ளை அடித்தவர் ஒடிசாவில் கைது

பெங்களூரு பப்பில் கொள்ளை அடித்தவர் ஒடிசாவில் கைது

பெங்களூரு: பெங்களூரு பப்பில் பணத்தை கொள்ளையடித்தவர், ஒடிசாவில் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு மல்லேஸ்வரம் மில்க் காலனியில் உள்ளது ஜியோமெட்ரி பப். இந்த பப்பில், கடந்த 12ம் தேதி கையில் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவர், பப் மேலாளர் அறையில் இருந்த 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக, சுப்பிரமணியநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.இப்புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் ஒடிசா, கஜபட்டி மாவட்டத்தை சேர்ந்த திலீப் குமார், 29, என தெரியவந்தது. அவர் கொள்ளை அடித்த பணத்துடன், விமானம் மூலம் ஒடிசாவிற்கு சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து, சுப்பிரமணியநகர் போலீசார், அங்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள போலீசார் உதவியுடன் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6,000 ரூபாய் பணம் மீட்கப்பட்டது.அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை எனவும்; தான் துப்பாக்கி பயன்படுத்தவில்லை எனவும் கூறினார். நேற்று முன்தினம் அவர், பெங்களூரு அழைத்து வரப்பட்டார்.அவரிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. திலீப், கடந்த 2016ல் பெங்களூருக்கு வேலை தேடி வந்தார்.அப்போது, வீடுகளுக்கு புகுந்து கொள்ளை அடித்ததற்காக, கோரமங்களா போலீசார், அவரை கைது செய்தனர்.சிறையில் இருந்து வெளிவந்தவர், ஜெ.பி., நகரில் உள்ள ஹோட்டலில் வேலை செய்தார். இந்த வேலையிலிருந்து, கடந்த மார்ச்சில் விலகினார்.இவரது அக்காவின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால், கொள்ளை அடிக்க திட்டமிட்டு, கடந்த 12ம் தேதி கொள்ளை அடித்து உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.மேலும், அவர் வைத்திருந்த இரும்பு பைப்பை, துப்பாக்கி என நினைத்து, பாதுகாவலர் புகார் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி