உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றவர் சுட்டு பிடிப்பு

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றவர் சுட்டு பிடிப்பு

தாவணகெரே: விசாரணைக்கு அழைத்து செல்லும் போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றவரை டி.எஸ்.பி., காலில் சுட்டு பிடித்தார்.சித்ரதுர்கா, ஹிரியூரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் என்ற கனுமா. இவர் தாவணகெரேவில் பிரபல ரவுடி. இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.கடந்த 5ம் தேதி, தாவணகெரே ஹடாதி சாலையில் உள்ள கிளப்பில் சீட்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, ஆயுதங்களுடன் வந்த எட்டு பேர், அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து சந்தோஷின் மனைவி ஸ்ருதி, வித்யா நகர் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., சரணபசவேஸ்வரா தலைமையில் குழு அமைத்து விசாரணை நடந்தது.இதற்கிடையில், ரவுடி கனுமாவை கொலை செய்ததாக கூறி, கடந்த 6ம் தேதி ஹொலல்கெரே போலீஸ் நிலையத்தில், சாவலி சந்தோஷ், 30, உட்பட பத்து பேர் சரண் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கனுமாவின் நண்பர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றாததால் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.இதில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். சரண் அடைந்தவர்களில் முக்கிய நபரான சாவலி சந்தோஷிடம், அவரது மொபைல் போன் குறித்து விசாரிக்கப்பட்டது. தன் மொபைல் போனை, ஆவரகெரே பகுதியில் துாக்கி வீசி எறிந்து விட்டதாக அவர் கூறினார்.போலீசார், அவரை நேற்று முன்தினம் மாலை, ஆவரகெரே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது, டி.எஸ்.பி., சரணபசவேஸ்வராவும் உடனிருந்தார். அந்த நேரத்தில், போலீசாரை தாக்கி விட்டு சந்தோஷ் தப்பி ஓடினார். இதில், இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.இதை பார்த்த டி.எஸ்.பி., வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தார். இருப்பினும், சாவலி சந்தோஷ் தப்பி ஓடினார். அப்போது, அவரது காலில் டி.எஸ்.பி., துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இதையடுத்து, சாவலி சந்தோஷ், காயம் அடைந்த போலீசார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை