மாம்பழம் விலை கிடுகிடு உயர்வு
மைசூரு: இம்முறை மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளது. மார்க்கெட்டில் எதிர்பார்த்த அளவில் வரத்து இல்லாததால், விலை அதிகரித்துள்ளது.கர்நாடகாவின் மார்க்கெட்டுகளுக்கு, மாம்பழங்கள் வர துவங்கியுள்ளன. ஆண்டுதோறும் மாம்பழ சீசனில், ராம்நகர், கோலார், சிக்கபல்லாபூர் உட்பட, பல்வேறு நகரங்களில் இருந்தும், பெங்களூருக்கு மாம்பழம் வருவது வழக்கம்.ஆனால் இம்முறை எதிர்பார்த்த அளவில் விளைச்சல் இல்லை. மார்க்கெட்டுக்களுக்கு அவ்வளவாக மாம்பழங்கள் வரத்து இல்லை. இதனால் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கின்றனர்.ரசப்புரி, செந்துாரம் உட்பட, பல வகையான மாம்பழங்களின் விலை, கிலோவுக்கு 180 ரூபாய் வரை எட்டியுள்ளது. வரத்து அதிகரிக்கும் வரை, இதே நிலை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள பழங்களில் இனிப்பும், சுவையும் இல்லை.பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு உட்பட, அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. மாம்பழங்களில் அதிகம், சுவையும் இல்லாததால் மாம்பழ பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.