உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ கட்டணம் குறையும்  நிர்வாக இயக்குனர் தகவல்

மெட்ரோ கட்டணம் குறையும்  நிர்வாக இயக்குனர் தகவல்

பெங்களூரு: ''பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் குறைக்கப்படும்,'' என, நம்ம மெட்ரோ நிர்வாக இயக்குனர் மகேஸ்வர் ராவ் தெரிவித்து உள்ளார்.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கடந்த 9 ம் தேதி மெட்ரோ கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்துவதாக நிர்வாகம் அறிவித்தது. பயணியர் பலரும் பாதிக்கப்பட்டனர். மெட்ரோ ரயிலில் செல்லும் பயணியரின் எண்ணிகையும் குறைந்தது.இந்நிலையில், நேற்று முதல்வர் சித்தராமையா தனது, 'எக்ஸ்' பக்கத்தில், கட்டணத்தை குறைக்குமாறு, மெட்ரோ நிர்வாக இயக்குனரிடம் முறையிட்டு இருந்தார்.இந்நிலையில், நேற்று மெட்ரோ நிர்வாக இயக்குனர் மகேஸ்வர் ராவ் அளித்த பேட்டி:நம்ம மெட்ரோ, கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பராமரிப்பு செலவுகள் அதிகரித்து உள்ளன. 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் உள்ளது. அடுத்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் அதை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.இதனை கருத்தில் கொண்டு, பல ஆலோசனைகளுக்கு பின்னர், மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், கட்டண உயர்வுக்கு பொது மக்கள், பயணியர், அரசியல் தலைவர்கள் என பலரிடமிருந்தும் எதிர்ப்பு வந்து உள்ளன. பயணியரின் கேள்விகளுக்கு மெட்ரோ நிர்வாகம் கட்டாயம் பதிலளிக்கும். இந்த விலை உயர்வு குறித்து, மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளோம்.இதன்பின், டிக்கெட் கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும். தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 90 ரூபாய் வசூலிப்பதிலும் எவ்வித மாற்றமும் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 14, 2025 13:18

விலை ஏற்றத்தினால் பயணியர் குறையக்கூடும். அதனால் வருமானமும் குறையும். கட்டணத்தை ஓரளவுக்கு குறைத்தால், பயணியர் மீண்டும் அதிகம் பயணிக்கக்கூடும். வருமானமும் அதிகரிக்கும். நீங்களும் கூடிய சீக்கிரத்தில் கடனை அடைக்கலாம். முதலில் அந்த சில்க் போர்டு டு எலக்ட்ரானிக் சிட்டி தடத்தை சீக்கிரம் பயணியர்கள் உபயோகத்துக்கு கொண்டுவரவும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 14, 2025 19:46

ஆமாம்....கட்டண குறைப்பு நடந்தால் பயணியர் அதிகரிப்பர்.....தவிர சில்க் போர்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரையில் ஏற்கனவே மேம்பாலம் உள்ளது அது தாமதமானால் அவ்வளவு பிரச்சனை இருக்காது....ஆனால் டின் பேக்டரியிலிருந்து ஜே பி நகர் செல்லவேண்டும் என்றால் மெஜஸ்டிக் சென்று தான் மறு ட்ரெயின் பிடிக்கவேண்டும் ஆதலால் சில்க் போர்ட் டு ஐடிபிஎல் வழித்தடத்தில் மெட்ரோ வேலையை சீக்கிரமாக முடித்து சேவையை தொடங்க வேண்டும்....!!!


புதிய வீடியோ