உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள்: பதக்கங்களை அள்ளும் மாணவ - மாணவியர்

மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள்: பதக்கங்களை அள்ளும் மாணவ - மாணவியர்

பெங்களூரு: மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகளில், மாணவ - மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன், கர்நாடக விளையாட்டு ஆணையம், இளைஞர் மேம்பாட்டு, விளையாட்டு துறை ஆகியவை இணைந்து நடத்தும் 'நான்காவது மினி கர்நாடகா விளையாட்டு போட்டி' நேற்று முன்தினம் துவங்கியது. ஸ்ரீ கன்டீரவா விளையாட்டு அரங்கம், ஹலசூரு ஏரி, பெங்களூரு கோல்ப் கிளப், ஒயிட்பீல்டு கோபாலன் விளையாட்டு மையம், கே.எம்.கரியப்பா ஹாக்கி மைதானம் உட்பட பல இடங்களில் போட்டிகளில் நடந்து வருகின்றன. தங்கள் பிள்ளைகளின் திறமையை பார்க்க, அவர்களின் பெற்றோர், பார்வைாளர்கள் பகுதியில் அமர்ந்து ஊக்கப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !