உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டாக்டர் பட்டம் அமைச்சர் மறுப்பு

டாக்டர் பட்டம் அமைச்சர் மறுப்பு

பெங்களூரு : கர்நாடக திறந்தவெளி பல்கலைக்கழகம் அறிவித்த, 'கவுரவ டாக்டர்' பட்டத்தை, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நிராகரித்து உள்ளார்.திறந்தவெளி பல்கலைக் கழக துணைவேந்தருக்கு, அமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் அறிவித்ததன் மூலம், சமுதாயத்தில் என் பொறுப்பை அதிகரித்துள்ளீர்கள். என்னை கவுரவப்படுத்தியதற்கு, நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சமுதாய நலனுக்காக பல திட்டங்களை வகுத்துள்ளேன். இவற்றை செயல்படுத்துவேன். திட்டங்களை செயல்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பு, எனக்கு உள்ளது. ஆனால் அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.எனக்கு பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை, திரும்ப பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். முழு மனதுடன், நான் எடுத்த முடிவாகும். என் முடிவை தவறாக நினைக்காமல், ஏற்றுக்கொள்வீர்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை