மேலும் செய்திகள்
4 வயது சிறுமி கொலை தாய், கள்ளக்காதலன் கைது
11-Sep-2025
உடுப்பி: மகளை கழுத்தை நெரித்து ஆணவக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். உடுப்பி மாவட்டம், கார்கலா தாலுகாவின், ஹிர்கானா கிராமத்தில் வசிப்பவர் ஷேக் முஸ்தாப், 50. இவரது மனைவி குல்ஜார் பானு, 45. தம்பதிக்கு ஷிபாநாஜ், 17, என்ற மகள் இருந்தார். ஷிபாநாஜ், உடுப்பியில் வசிக்கும் சலீம் என்பவருடன் நட்பாக இருந்தார். இது குல்ஜார் பானுவுக்கு பிடிக்கவில்லை. ஷிபாநாஜ் அவ்வப்போது நண்பரை பார்க்க செல்வார். இதே காரணத்தால் தாய்க்கும், மகளுக்கும் சண்டை நடக்கும். செப்., 20ம் தேதி, தாயும், மகளும் வீட்டில் இருந்தனர். அப்போது நண்பரை சந்திக்க உடுப்பிக்கு செல்லப்போவதாக ஷிபாநாஜ் கூறினார். இதற்கு குல்ஜார் பானு எதிர்ப்புத் தெரிவித்தார். மகளை வெளியே செல்ல விடாமல் தடுத்தார். இதனால், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. கோபத்தில் இருந்த குல்ஜார், மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின் மயங்கி விழுந்ததாக கூறி, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஷிபாநாஜை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். குடும்பத்தினரிடம் மகள் தற்கொலை செய்து கொண்டதாக குல்ஜார் நாடகமாடினார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் ஷிபாநாஜ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மகள் கொலையானது தெரிந்து, மனம் நொந்த தந்தை ஷேக் முஷ்தாப், கார்கலா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில், குல்ஜார் பானுவை போலீசார் விசாரித்தபோது, மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
11-Sep-2025