உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

கோலார்: குடும்ப பிரச்னையால், இரட்டை குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய், தானும் தற்கொலைக்கு முயற்சித்தார். கோலார் மாவட்டம், பங்கார்பேட் தாலுகாவின், கோடகுர்கி கிராமத்தில் வசிப்பவர் முரளி, 34. இவரது மனைவி உஷா, 28. தம்பதிக்கு ஹர்ஷித், 3, ஹிதேஷ், 3, என்ற இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தன. குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதி இடையே அவ்வப்போது சண்டை நடக்கும். நேற்று காலை 9:30 மணியளவில், தம்பதி இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் மனம் நொந்த உஷா, குழந்தைகளை அழைத்து கொண்டு, பூதிகோட்டேவுக்கு வந்தார். அங்குள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற ஹைதர் அலி கோட்டைக்கு சென்றார். அங்கிருந்த பெரிய தண்ணீர் தொட்டியில், குழந்தைகளை மூழ்கடித்து கொலை செய்தார். அதன்பின் அவரும் அதில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதை கண்ட சுற்றுலா பயணியர் சிலர், உஷாவை காப்பாற்றினர். ஆனால் குழந்தைகள் இறந்து விட்டன. பங்கார்பேட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை