உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ம.பி., அமைச்சர் விஜய் ஷா கருத்து சந்தோஷ் லாட் கடும் கண்டனம்

ம.பி., அமைச்சர் விஜய் ஷா கருத்து சந்தோஷ் லாட் கடும் கண்டனம்

பெங்களூரு: ''ராணுவ கமாண்டர் சோபியா குரேஷி பற்றி மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா கூறிய கருத்து வெட்கக்கேடானது,'' என்று, கர்நாடக தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:போர் நிறுத்தம் என்று அறிவிப்பு வெளியான பிறகும், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. அந்த நாட்டிற்கு எதிராக, இந்தியா மிக பெரிய போரை நடத்தும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இரவோடு, இரவாக போரை நிறுத்தியது ஏன். எந்த அடிப்படையில் மத்திய அரசு நிறுத்தியது. இந்த பிரச்னையில் முடிவு எடுக்க வேண்டியது தனி நபர் இல்லை.பாகிஸ்தான் பயப்படுவதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், நான் தான் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தேன் என்று கூறுகிறார். தேசிய கொடி பேரணி நடத்துவதற்கு பதில், டிரம்ப் பேரணியை பா.ஜ., நடத்தட்டும். கடந்த 20 நாட்களுக்கு மேலாக நாட்டில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு நன்கு தெரியும். முப்படைகளும் நமது நாட்டை பாதுகாத்து உள்ளன. பாகிஸ்தானை தாக்குவதிலும் நாம் வெற்றி பெற்றோம்.பஹல்காம் தாக்குதல் நடந்த பின் மோடி தனது வெளிநாட்டை பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு நாடு திரும்பினார். ஆனால் உடனடியாக பீஹார் தேர்தல் பிரசாரம் சென்றார். பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு யார் மீதும் நம்பிக்கை கிடையாது. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் கூறுகிறார். அப்படி என்றால் போரை நிறுத்தும்படி ராணுவம் தான் கேட்டதா? எல்லாவற்றையும் பிரதமர் மோடி செய்கிறார் என்று பா.ஜ.,வினர் கூறுகின்றனர். ஆனால் அனைத்து புகழும் முப்படையினருக்கு செல்ல வேண்டும்.பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு உள்ள பயங்கரவாத இடங்களை அழித்த ராணுவ கமாண்டர் சோபியா குரேஷியை நாடே பாராட்டுகிறது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் இருக்கும் மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா, சோபியாவை பயங்கரவாதிகளின் சகோதரி என்று கூறி இருப்பது வெட்ககேடானது. பா.ஜ., ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என்பது போன்று உள்ளது அமைச்சரின் கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை