மேலும் செய்திகள்
வாலிபர் வெட்டி கொலை மாணவர்கள் 2 பேர் கைது
07-Sep-2025
மைசூரு : மைசூரில் காரில் இருந்த ரவுடியை வெளியே இழுத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பழிக்கு பழியாக கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மைசூரு, உதயகிரி கேத்தமாரனஹள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 28. ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று காலை 9:30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட வெங்கடேஷ், மைசூருக்கு சென்றார். நஜர்பாத் பகுதியில் உள்ள தசரா கண்காட்சி வளாகம் முன் காரை நிறுத்திவிட்டு, டிரைவர் இருக்கையில் அமர்ந்து மொபைல் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கும்பல், காரில் இருந்து வெங்கடேஷை வெளியே இழுத்து சாலையில் போட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். தலை, கழுத்து, முதுகு என உடல் முழுதும் பலத்த வெட்டுக் காயம் அடைந்த வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், டி.சி.பி.,க்கள் சுந்தர்ராஜ், பிந்துமணி உள்ளிட்ட போலீசார் விரைந்தனர். வெங்கடேஷின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்து, போலீசார் தகவல் பெற்றுக் கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பழிக்கு பழியாக வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மைசூரை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக், 30, கடந்த மே 5ம் தேதி, வருணாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை, பெண் விவகாரத்தில் நடந்தது. ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் கொலையின் பின்னணியில் வெங்கடேஷ் இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் கூட்டாளிகள், நேரம் பார்த்து வெங்கடேஷை கொலை செய்திருக்கலாமென போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள கார்த்திக்கின் கூட்டாளிகள் ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர். பட்டப்பகலில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம், மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
07-Sep-2025