உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் நிலையங்களிலும் நந்தினி தயாரிப்புகள்

பஸ் நிலையங்களிலும் நந்தினி தயாரிப்புகள்

பெங்களூரு: “கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையங்களிலும், நந்தினி தயாரிப்புகளை விற்பனை செய்ய இட வசதி செய்து தரப்படும்,” என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு உட்பட, பல்வேறு இடங்களில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையங்களில், நந்தினி தயாரிப்புகளை விற்பனை செய்ய, இட வசதி செய்து தரப்படும். மெட்ரோ ரயில் நிலையங்களில், நந்தினி கடைகளுக்கு அனுமதி அளித்த பின், அமுலுக்கு அளித்திருக்க வேண்டும். துணை முதல்வர் சிவகுமார், எட்டு முதல் ஒன்பது இடங்களில் நந்தினி கடைகளுக்கு அனுமதி அளிப்பதாக கூறியுள்ளார். இம்முறை மாம்பழம் விளைச்சல் அதிகரித்ததால், விலை குறைந்துள்ளது. ஹாப்காம்சில் நியாயமான விலை உள்ளது. கோலார் மாவட்டத்தின் மாம்பழம், அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டது. ஆந்திராவினர் நமது மாநில மாம்பழத்துக்கு தடை விதித்ததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி