உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூபா, ரோகிணிக்கு புதிய பொறுப்பு

ரூபா, ரோகிணிக்கு புதிய பொறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றும் ரூபா; ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி இடையே, 2023ல் தனிப்பட்ட காரணங்களுக்காக மோதல் ஏற்பட்டது. இருவரும் பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சித்துக் கொண்டதால், இருவரையும் இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் அரசு வைத்தது.ஏழு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக ரூபாவும், விவசாய துறை செயலராக ரோகிணியும் நியமிக்கப்பட்டனர். உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய ஐ.ஜி., வர்த்திகா கட்டியார், ரூபா இடையே ஏற்பட்ட மோதலால், இருவரும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனர். கர்நாடக பட்டு சந்தை வாரிய நிர்வாக இயக்குநராக ரூபா நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ரூபாவுக்கு அரசு பதவி உயர் வழங்கியது. கூடுதல் டி.ஜி.பி., ஆனார்.இந்நிலையில் ரூபாவுக்கு அரசு நேற்று புதிய பொறுப்பு கொடுத்துள்ளது. பெங்களூரு நகர பணிக்குழு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் இதற்கு முன்பு, தற்போதைய போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் இருந்தார்.இதுபோல விவசாய துறை செயலராக இருந்த ரோகிணி, தொழிலாளர் துறை செயலராக நேற்று மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஷெட்டண்ணவர், பெலகாவி மண்டல கமிஷனராகவும், அக்ரம் பாஷா கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !