உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிதின் கட்கரி பிரதமர் ஆகலாம் சந்தோஷ் லாட் கணிப்பு

நிதின் கட்கரி பிரதமர் ஆகலாம் சந்தோஷ் லாட் கணிப்பு

பீதர்: ''மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பிரதமர் ஆகலாம்,'' என, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறினார். பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் அரசு, ஐந்து வாக்குறுதி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது. இத்திட்டங்கள் மூலம் அரசின் கஜானா காலியாகும் என்று, பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார். ஆனால், இப்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட, வாக்குறுதி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பீஹார் தேர்தலில் வெற்றி பெற, பெண்களுக்கு பா.ஜ., ஒரு ஓட்டுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.,சில் உள்ளவர்களுக்கு மட்டும் தேச பக்தி இல்லை. நாட்டில் அனைவருக்கும் உள்ளது. முதல்வர், அமைச்சர்களை இரவு விருந்திற்கு அழைப்பது தவறா? அமைச்சரவை மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை. அமைச்சரவையை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் அதில் முடிவு எடுக்கும் முழு அதிகாரமும், முதல்வருக்கு உள்ளது. கர்நாடக அரசியலில் நவம்பரில் எந்த புரட்சியும் இல்லை. பா.ஜ.,வில் புரட்சி ஏற்படலாம். மோடிக்கு பதிலாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் ஆகலாம். நாங்களும் அதை ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை