மேலும் செய்திகள்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல்களில் சோதனை
03-Oct-2026
பெங்களூரு: இனிப்பு தயாரிக்க, செயற்கை ரசாயனம் பயன்படுத்திய, 10 கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ‘நோட்டீஸ்’ வழங்கி உள்ளனர். தசரா, தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, காரம் தயாரிக்கும் கடைகள் மும்முரமாக இயங்குகின்றன. இந்த கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகளில் கலப்படம் ஏற்படுவதை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்தது. இதன்படி, பெங்களூரின் பல பகுதிகளில் உள்ள, 80 இனிப்பு தயாரிக்கும் கடைகளுக்கு, உணவுத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கடைகளில் தயாரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் சேமிக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இதில், 10 கடைகளில் தயாரிக்கப்பட்ட இனிப்பு உணவுகளில், செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 10 கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. நோட்டீஸ்கள் போன்ற நடவடிக்கைகள் வரும் காலத்திலும் தொடரும் என உணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
03-Oct-2026