உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லஞ்சம் வாங்கிய அதிகாரி பணிநீக்கம்

லஞ்சம் வாங்கிய அதிகாரி பணிநீக்கம்

தங்கவயல்: குழந்தை திருமணத்தை மூடி மறைக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி கல்யாண் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். தங்கவயல், கேசம்பள்ளி அருகே உள்ள கோகிலஹள்ளி கிராமத்தில் 17 வயது சிறுமி, திருமணத்துக்கு பின் கருவுற்றார். இதை அறிந்த கோலார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய 'ஹெல்ப் லைன்' ஒருங்கிணைப்பாளர் கல்யாண்குமார், சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளார். இதை மூடி மறைக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 30 ஆயிரம் ரூபாயை தவணை முறையில் வாங்கியுள்ளார். மீதியுள்ள 20 ஆயிரம் ரூபாயை வழங்க கெடு விதித்து, அதை உரிய நாட்களுக்குள் வழங்க தவறியதால் போலீசில் புகார் செய்வதாக மிரட்டி தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் புகார் செய்ததை தொடர்ந்து, கல்யாண் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை, தாய் - சேய் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டிய அதிகாரி, அதை மூடி மறைக்க லஞ்சம் வாங்கியது நிரூபனமாகியுள்ளதால், அவரை பணி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்று கல்யாண் குமாரை கோலார் கலெக்டர் எம்.ஆர். ரவி பணி நீக்கம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி