உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.60 லட்சம்  லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்ட்

 ரூ.60 லட்சம்  லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்ட்

மாண்டியா : ரெஸ்டாரன்டில் மதுபான கடை திறக்க 'சிஎல் 7' உரிமம் வழங்குவதற்கு 60 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட, கலால் துறை துணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மாண்டியாவில் கலால் துறையில் துணை கமிஷனராக பணியாற்றியவர் நாகஷயனா. இவர், தொழில் அதிபரான சுந்தர் என்பவரிடம், ரெஸ்டாரன்டில் மதுபான கடை திறக்க சிஎல் 7 உரிமம் வழங்குவதற்கு 60 லட்சம் ரூபாய், லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டசபையிலும் இந்த ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. கலால் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகஷயனா லஞ்சம் கேட்டது உறுதியானது. இதனால் அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பெங்களூரில் கலால் துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வரும் முரளி, எலஹங்காவில் பள்ளியின் அருகில் மதுபான கடை திறக்க சிஎல் 7 உரிமம் கொடுத்தார் என்றும்; இரண்டு ஆண்டுகளில் 60 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கி, பல லஞ்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை