உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 4 வயது சிறுமி பலாத்காரம்; முதியவருக்கு 20 ஆண்டு

4 வயது சிறுமி பலாத்காரம்; முதியவருக்கு 20 ஆண்டு

பெலகாவி : சாக்லேட் ஆசை காட்டி, 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, பெலகாவி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெலகாவி நகரின், நந்தகடா கிராமத்தை சேர்ந்தவர் நிசார் அகமது பக்ருசாப் சாக்பாவி, 68. இவரது வீட்டின் அருகில், 4 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசிக்கிறார். முதியவர் நிசார் அகமது, சிறுமியிடம் நன்றாக பேசுவார்.கடந்த 2024, பிப்ரவரி 24ம் தேதி சிறுமி சாலையில் தனியாக விளையாடினார். இதை பார்த்த நிசார் அகமது, சாக்லேட் தருவதாக ஆசை காண்பித்து, தன் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.மகளை காணாமல் சுற்றுப்பகுதிகளில் தேடிய போது, முதியவர் வீட்டுக்குள் இருந்து சிறுமி அழுதபடி வெளியே வந்தார். பெற்றோர் விசாரித்த போது நடந்ததை கூறினார். இது குறித்து நந்தகடா போலீஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர்.இதையடுத்து, நிசார் அகமதுவை கைது செய்த போலீசார், ஹிண்டல்கா சிறையில் அடைத்தனர். விசாரணையை முடித்து பெலகாவியின் போக்சோ நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி புஷ்பலதா, நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை