உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தனியார் பஸ் - கார் மோதல் ஒருவர் பலி; 9 பேர் காயம்

தனியார் பஸ் - கார் மோதல் ஒருவர் பலி; 9 பேர் காயம்

ஷிவமொக்கா: பெங்களூரில் இருந்து ஷிவமொக்காவுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ், ஷிவமொக்காவில் எதிரே வந்த கார் மீது மோதியதில், காரில் பயணம் செய்த ஒருவர் பலியானார்.பெங்களூரில் இருந்து ஷிவமொக்காவுக்கு 20 பயணியருடன் நேற்று முன்தினம் தனியார் பஸ் புறப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணியளவில் ஷிவமொக்கா நகரில் எல்.எல்.ஆர்., சாலையில் சென்று கொண்டிருந்தது.அப்போது கோபி சதுக்கத்தை நோக்கி, எல்.எல்.ஆர்., சாலையில் திடீரென கார் ஒன்று நுழைந்தது. அதை சற்றும் எதிர்பார்க்காததால், கார் மீது மோதுவதைத் தவிர்க்க பஸ் ஓட்டுநர் முயற்சித்தும் முடியவில்லை.கார் மீது மோதிய பஸ், கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த நடைபாதையில் ஏறி, ஒரு கடை மீது மோதி நின்றது.காரில் பயணம் செய்த பிரதீப், 35, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அப்பகுதியினர், பஸ்சில் இருந்த பயணியரை மீட்டனர். இவர்களில் ஒன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.தகவல் அறிந்த ஷிவமொக்கா மேற்கு போக்குவரத்து போலீசார், காயம் அடைந்தவர்களை, அரசு மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை