உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டூ வீலர் - லாரி மோதி ஒருவர் பலி

டூ வீலர் - லாரி மோதி ஒருவர் பலி

தங்கவயல், : தங்கவயல் -- பங்கார்பேட்டை சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி வளைவு ஒன்றில் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பங்கார்பேட்டை கெங்கம்மா பாளையாவை சேர்ந்த மஞ்சுநாத், 35, என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நிர்மலா, 40, பலத்த காயம் அடைந்தார். கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.லாரி டிரைவர் தலைமறைவானார். லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இச்சாலையில் ஒருவாரமாக அனுமதி இல்லாமலும், அதிவேகமாகவும், அளவுக்கு மீறி சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது போலீசார் சோதனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ