உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாகிஸ்தானை நம்ப முடியாது

பாகிஸ்தானை நம்ப முடியாது

மைசூரு: ''பாகிஸ்தானை எப்போதும் நம்ப முடியாது,'' என பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறுகையில், ''பாகிஸ்தானை எப்போதும் நம்ப முடியாது. அவர்கள் பலமுறை போர் ஒப்பந்தத்தை மீறி உள்ளனர். அவர்கள் தான் நம்மை சீண்டுகின்றனர். எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்று சீண்டினால், அது போராக கருதப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து உள்ளது.''பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை பார்ப்போம். இவ்விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. நாட்டின் நலனை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இல்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதியாக இருப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி