பெண் குழந்தைகளை பெற்றோர் கண்காணியுங்கள்
பெங்களூரு: 'தங்கள் பெண் குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்' என, கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நாகண்ண கவுடா கூறி உள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூரில் கூறியதாவது: தங்கள் குழந்தைகளிடம் பெற்றோர் நண்பர்கள் போல நடந்து கொள்ள வேண்டும். இணையத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தங்கள் குழந்தைகளிடம் கூற வேண்டும். பெண் பிள்ளைகளை முழு நேரமும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் சிறுமியருக்கு ஆன்லைனில் ஏற்படும் பாலியில் சீண்டல்களிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும். குழந்தைகள் பள்ளிகளில் எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ, அவ்வளவு நேரம் அவர்கள் இணைய உலகில் இருந்து தள்ளி இருக்கின்றனர். இது மிக நல்ல விஷயம். சிறுமியர் மீது ஆன்லைனில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.