பவித்ரா கவுடா ஜாமின் டிச.,4க்கு ஒத்திவைப்பு
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் பவித்ரா கவுடாவின் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட, 17 பேர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதன் பின், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அனைவரின் ஜாமினை ரத்து செய்தது. இதையடுத்து, 2025 ஆக., 15ல் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தன் சகோதரனின் திருமணத்தில் பங்கேற்க, டிச., 12, 13ம் தேதிகளில் ஜாமின் வழங்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் பவித்ரா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, டிச., 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.