உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., தமிழ் சங்க திருமண மேடை 

பெங்., தமிழ் சங்க திருமண மேடை 

பெங்களூரு: பெங்களூரு தமிழ் சங்கத்தின் 164வது திருமண மேடை நேர்காணல் விழா நடந்தது. பெங்களூரு தமிழ் சங்கத்தின் 164வது திருமண மேடை நேர்காணல் விழாவை கர்நாடக மாநில காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.ராஜா தம்பதி, தமிழ் சங்க மூத்த உறுப்பினர் தாம்சன், தமிழ் சங்க துணைத்தலைவர் அமுத பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பெங்., தமிழ் சங்க செயலர் சம்பத் முன்னிலை வகித்தார். 85க்கும் மேற்பட்டவர்களுக்கு வரன்கள் பார்க்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. வரன்களை அமுத பாண்டியன் அறிமுகம் செய்து வைத்தார். திருமண மேடை பொறுப்பாளர்கள் ராஜசேகர், வசந்த், அனிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி