உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செப்., 5ல் தங்கவயலில் மக்கள் குறை தீர்ப்பு

 செப்., 5ல் தங்கவயலில் மக்கள் குறை தீர்ப்பு

தங்கவயல்: ''அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும். சட்டசபைத் தொகுதி வளர்ச்சி நிதி செயல்பாடு குறித்தும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என, கோலார் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவி த்தார். கோலார் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் நேற்று முல்பாகல், தங்கவயல், பங்கார் பேட்டை, கோலார் ஆகிய தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, அலுவலக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின், ராபர்ட்சன்பேட்டையில் உள்ள தங்கவயல் தாலுகா அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி: அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையவும், தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும். அரசின் சலுகைகள் பெற பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில், இம்மாதம் 5ம் தேதி காலை, 9:00 மணி முதல் 11:00 மணிக்குள் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அப்போது அளிக்கலாம். அங்கேயே அதற்கான தீர்வு காணப்படும். தீர்க்கப்படாத பிரச்னைகளை வாரந்தோறும் புதன்கிழமை மதியம் கோலார் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில் தீர்வு காணப்படும். மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது. அதன் படி, நடவடிக்கை எடுக்கப்படும். தங்கவயல் தாலுகா ஆன பின் பல துறைகளின் அலுவலகங்கள் இன்னும் பங்கார்பேட்டையில் தான் உள்ளது என்ற தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது. அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை