ஞானேந்திரகுமார் மீது நடவடிக்கைக்கு அனுமதி
பெங்களூரு: கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில், கைதான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, முதல்வர் சிவகுமார் அனுமதி அளித்துள்ளார். கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, கால்நடை மருத்துவர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்கும், சி.ஐ.டி., போலீசார், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார், பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா உள்ளிட்டோரை கைது செய்துள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரியான ஞானேந்திர குமார் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அரசிடம், சி.ஐ.டி., அனுமதி கேட்டிருந்தது. இதற்கு முதல்வர் சிவகுமார் நேற்று அனுமதி கொடுத்தார்.