உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சர்ச்சைக்குரிய கன்னட எழுத்தாளர் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு

சர்ச்சைக்குரிய கன்னட எழுத்தாளர் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு

பெங்களூரு: தாவணகெரேயை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கா வாழ் கன்னட எழுத்தாளர் ரவி ஹன்சு. ‘பசவ மண்டபம்’ என்ற பெயரில் கடந்த 15ம் தேதி புத்தகம் வெளியிட்டார். இது தொடர்பாக 13ம் தேதி அளித்த பேட்டியில், பசவண்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு சம்பந்தப்பட்ட சமூகத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பெங்களூரு ஐகிரவுண்ட் போலீஸ், பெலகாவி போலீஸ் நிலையங்களில், ரவி ஹன்சு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் ரவி ஹன்சு, அமெரிக்கா செல்ல திட்டமிட்டார். கேரள மாநிலம், கொச்சியில் இருந்து துபாய் செல்ல சென்றார். அவருக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை அறிந்த தொழில் பாதுகாப்பு படையினர், அவரை தடுத்து நிறுத்தி, உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கடந்த 21ம் தேதி கைது செய்தனர். தகவல் அறிந்த பெங்களூரு போலீசார், அவரை பெங்களூரு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவி ஹன்சு நேற்று மனு தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !