உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிளாஸ்டிக் பயன்பாடு ரூ.38 லட்சம் அபராதம்

பிளாஸ்டிக் பயன்பாடு ரூ.38 லட்சம் அபராதம்

பெங்களூரு: பெங்களூரில் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு 38 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன தலைவர் கரீகவுடா தெரிவித்துள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இதற்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 27 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கப்படுகிறதா என்பது சோதனை நடத்தப்படுகிறது. இச்சோதனை கடந்த மாதம் முதல் துவங்கியது. ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் 24,000 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்த விற்பனையாளர்களுக்கு 19.66 லட்சம் ரூபாயும்; சில்லறை வியாபாரிகளுக்கு 18.41 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 38 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் மதிப்பு 49.14 லட்சம் ரூபாய். பிளாஸ்டிக் பைகள் குறித்த சோதனை தொடரும்; மக்களும் துணிப்பைகளையே பயன்படுத்த வேண்டும். குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், தங்கள் பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் இருந்தால் 94481 97197 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி