உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விஷம் கலந்த ரசாயன பால்: கோலாரில் அதிர்ச்சி தகவல்

விஷம் கலந்த ரசாயன பால்: கோலாரில் அதிர்ச்சி தகவல்

முல்பாகல் : கோலார் மாவட்டத்தில் ஒரு கிராமமே விஷத்தன்மையான ரசாயனம் கலந்த பால் தயாரித்து, புகழ் பெற்ற பால் நிறுவனங்களின் பாலுடன் கலந்து விற்பனை செய்து வரும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது. கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா தாய்லுார் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அப்பேனஹள்ளி என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக பால் பவுடருடன் ரசாயனம் கலந்து பால் தயாரித்து, கேன்களில் நிரப்பி சப்ளை செய்து வந்து உள்ளனர். அப்பேன ஹள்ளியில் ஒருவர், இருவர் என்றில்லாமல் அந்த கிராமமே கலப்பட பால் தயாரிப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்தன. தகவல் அறிந்த ஒரு தரப்பினர், போலீசார் உதவியுடன் அமரேஷ் என்பவரின் பால் பண்ணைக்குள் நுழைந்தனர். அங்கு 'மால்டோடெக்ஸ்ட் ரீன்' என்ற ரசாயன மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். பால் பவுடருடன் ரசாயன பவுடரை கலந்து, பால் தயாரிக்கின்றனர். இந்த ரசாயனத்தை பயன்படுத்த எந்தவொரு அனுமதியும் பெறவில்லை. பொதுவாக பிறந்த 6 மாத குழந்தைக்கு பால் புகட்டப்படுகிறது. நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்துக்கும் பால் வழங்கப்படுகிறது. இத்தகைய பவுடர் பாலில் ரசாயனத்தை கலப்பதால் பல பாதிப்புகள் ஏற்படும். ரத்த சர்க்கரை அதிகரிக்கும். ரத்த அழுத்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். பல பக்கவிளைவுகள் ஏற்படும். இதய நோய், சிறுநீரக கோளாறு, தோல்வியாதி, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இத்தகைய விஷத் தன்மைமிக்க கலப்பட பாலை, பிராண்டட் நிறுவனங்களான நந்தினி, தொட்லக், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் பெயரில் சப்ளை செய்து வருவதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. கலப்பட பால், ரசாயன பவுடர் மூட்டைகள், இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை முல்பாகல் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !