பெலகாவி பப், கிளப்களில் போலீசார் அதிரடி சோதனை
பெலகாவி: செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு சொந்தமான ஹோட்டல்கள், கிளப், பப்கள் உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன், பல்வேறு பப்கள், பார்களில் போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதேபோன்று, பெலகாவியில் பப், கிளப் உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் போலீசார், 'ஷாக்' கொடுத்தனர். பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பிரகாஷ் நிக்கம் தலைமையில், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் ஹோட்டல்கள், கிளப்புகள், பப்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. சில கிளப்களில் விதிமுறைகளை மீறுவது தெரிந்தது. சில இடங்களில் சிறு வயதினருக்கு மதுபானம் வினியோகித்தது தெரிந்தது. அதிக சத்தமாக ஒலி பெருக்கி பயன்படுத்தினர். இத்தகைய கிளப், பப்களை போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து மூட வைத்தனர்.