உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் 5.35 லட்சம் கேமராக்கள் தனியார் உதவியுடன் போலீசார் சாதனை

பெங்களூரில் 5.35 லட்சம் கேமராக்கள் தனியார் உதவியுடன் போலீசார் சாதனை

பெங்களூரு: பெங்களூரில் பாதுகாப்புக்கு, தனியார் மற்றும் அரசு ஒருங்கிணைப்பில், 5.35 லட்சம் கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் துறை பொருத்தியுள்ளது. கடந்தாண்டு மட்டும், 3 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டன.இதுதொடர்பாக, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:பெங்களூரில் பல்வேறு இடங்களில், பாதுகாப்புக்காக, 'ஜியோ டிராக்கிங்' வசதி கொண்ட, 5.35 கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் துறை பொருத்தியுள்ளது.கடந்தாண்டு மட்டுமே 3 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டன. எம்.சி.சி.டி.என்.எஸ்., எனும் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்புக்கான மொபைல் - கணினி உதவி திட்டத்தின் கீழ், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.பெங்களூரில் 5.35 லட்சம் கண்காணிப்பு கேமராக்களும், எம்.சி.சி.டி.என்.எஸ்., தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன. 2024 ஜனவரி 1 வரை, பெங்களூரில் 2,32,711 கேமராக்கள் இருந்தன. ஒரே ஆண்டில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கேமராக்கள் பொருத்தியது, பெரிய சாதனையாக கருதப்படுகிறது.விபத்து, திருட்டு உட்பட எந்த இடத்தில் எத்தகைய குற்றங்கள் நடந்தாலும், உடனடியாக அந்த இடத்தில் பொருத்தப்பட கேமராக்கள் மூலம் தகவல் பெறலாம். இவற்றில் பதிவாகும் காட்சிகள், போலீசாரின் விசாரணைக்கும் உதவும்.கேமராக்கள் பொருத்துவதில் நிர்ணயித்த காலத்துக்கு முன்பே, இலக்கை எட்டினோம். குற்ற வழக்குகளின் விசாரணைக்கு மட்டுமின்றி, பொது மக்களின் பாதுகாப்பிலும் கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை