உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வெளிநாட்டவருக்கு வீடு கொடுத்தால் வழக்கு பாயும் என போலீஸ் எச்சரிக்கை

வெளிநாட்டவருக்கு வீடு கொடுத்தால் வழக்கு பாயும் என போலீஸ் எச்சரிக்கை

பெங்களூரு; 'வெளிநாட்டு பிரஜைகளுக்கு முறைப்படி அனுமதி பெறாமல் வாடகைக்கு வீடு கொடுக்கும் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியாதவது: வெளி நாட்டு பிரஜைகளுக்கு, வாடகைக்கு வீடு கொடுப்பதற்கு முன்பு, சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளி நாட்டவருக்கு வீடு கொடுத்த 24 மணி நேரத்துக்குள், வெளி நாட்டவர் பிரிவு அலுவலக போர்ட்டலில், அவர்களை பற்றிய விபரங்களை பதிவேற்ற வேண்டும். இல்லை என்றால் வீட்டு உரிமையாளர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டி வரும்.பெரும்பாலான வீடுகளின் உரிமையாளர்கள், இந்த நடைமுறையை மீறி, வெளிநாட்டு பிரஜைகளுக்கு வீடு கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக பெங்களூரு போலீசார், நான்கு ஆண்டுகளில் 75 வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவற்றில் 42 வழக்குகள், நீதிமன்றங்களில் விசாரணை கட்டத்தில் உள்ளன.பண்டே பாளையா போலீஸ் நிலைய எல்லையில், வெளி நாட்டு பிரஜைகளுக்கு விதிமீறலாக வாடகைக்கு வீடு கொடுத்த உரிமையாளருக்கு, சமீபத்தில் நீதிமன்றம் 5,000 ரூபாய் அபராதம் விதித்தது.கல்வி, தொழில், சுற்றுலா என, பல்வேறு நோக்கங்களுக்காக பெங்களூருக்கு வரும் வெளி நாட்டு பிரஜைகள், விசா காலம் முடிந்தாலும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல், சட்டவிரோதமாக பெங்களூரில் வசிக்கின்றனர். இவர்கள் போதைப்பொருள் விற்பனை, கொள்ளை உட்பட, பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.வெளி நாட்டவர் வசிக்கும் பகுதிகளில், போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி, சட்டவிரோதமாக வசிப்பதை கண்டுபிடிக்கின்றனர்.அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்கின்றனர். வெளிநாட்டவர் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.சமீபத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு சட்டவிரோதமாக வசித்த, 10 வெளிநாட்டு பிரஜைகளை கண்டுபிடித்தனர்.இவர்கள் மீது ராமமூர்த்தி நகர், பானஸ்வாடி, பரப்பன அக்ரஹாரா, சோழதேவனஹள்ளி, வர்தூர் போலீஸ் நிலையங்களில், தனித்தனி வழக்கு பதிவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை