உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இடைக்கால ஜாமின் கோரிய பிரதோஷ் மனு தள்ளுபடி

இடைக்கால ஜாமின் கோரிய பிரதோஷ் மனு தள்ளுபடி

பெங்களூரு: தந்தையின் திதியில் பங்கேற்க இடைக்கால ஜாமின் கோரிய, சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் 'அப்ரூரவரான' பிரதோஷ் மனுவை, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா, பிரதோஷ் ராவ் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரதோஷ் ராவ் 'அப்ரூரவராக' மாறி உள்ளார். இறந்த தன் தந்தையின் இரண்டாம் ஆண்டு திதியில் பங்கேற்க, தனக்கு மூன்று வாரம் இடைக்கால ஜாமின் வழங்கும்படி, பெங்களூரு 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி சுஜாதா கேட்ட பின், பிரதோஷ் ராவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை