உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜனாதிபதி முர்மு இன்று மைசூரு வருகை 

ஜனாதிபதி முர்மு இன்று மைசூரு வருகை 

மைசூரு: மைசூரு மானச கங்கோத்ரி வளாகத்தில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் வாய் பேச முடியோதார் மற்றும் காது கேளாதோருக்கு சிகிச்சை அளிக்கும், மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் வைர விழா இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு டில்லியில் இருந்து, விமானம் மூலம் மைசூருக்கு மாலை 3:20 மணிக்கு வருகிறார். மாலை 4:20 மணிக்கு நடக்கும் வைர விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்ததும், மைசூரு நகரில் தனியார் ஹோட்டல் தங்குகிறார். நாளை காலை 8:00 மணிக்கு, சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்கிறார். பின், மைசூரு அரண்மனைக்கு சென்று, மைசூரு மஹாராணி பிரமோதா தேவி அளிக்கும், காலை விருந்தில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை