மேலும் செய்திகள்
வாடிக்கையாளர் நகைகளுடன் கடை உரிமையாளர் ஓட்டம்
11-Sep-2025
மாகடி ரோடு:காசினோ சூதாட்டத்துக்காக திருடிய, கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரின், அக்ரஹாரா தாசரஹள்ளியில் வீரபத்ரா கோவில் உள்ளது. இக்கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் ரமேஷ் சாஸ்திரி, 55. இந்த கோவிலுக்கு அடிக்கடி, சாமி தரிசனம் செய்ய ஒரு தம்பதி வருவர். தம்பதிக்கும், அர்ச்சகருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் தம்பதியின் வீட்டில், சத்யநாராயண பூஜை நடந்தது. ரமேஷ் பூஜையை நடத்திக் கொடுத்தார். பூஜை முடிந்ததும் சாமிக்கு அணிந்திருந்த நகைகளை, தம்பதி எடுத்து வைத்தபோது 440 கிராம், நகை மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து அர்ச்சகரிடம் கேட்டபோது, அவர் சரியாக பதில் சொல்லவில்லை. சந்தேகம் அடைந்த தம்பதி, மாகடி ரோடு போலீசில் கடந்த 22ம் தேதி புகார் செய்தனர். ரமேஷிடம் போலீசார் விசாரித்தனர். நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கோவில் அர்ச்சகராக இருந்தாலும், காசினோ சூதாட்டத்தில் ரமேஷுக்கு ஆர்வம் இருந்துள்ளது. கோவாவில் உள்ள காசினோ கிளப்பில் பண முதலீடு செய்துள்ளார். சூதாட்டத்தில் ஈடுபட நகைகளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. பூஜை செய்ய சென்ற வேறு வீடுகளிலும் திருடினாரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
11-Sep-2025